ஆன்லைன்பிஜே பற்றி

முக்கியஅறிவிப்பு

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்.

onlinepj.com இணைய தளம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்கானது.

நம்முடைய இயக்கம் தொடர்பான அனைத்து செய்திகளையும், அதன் கொள்கை, கோட்பாடுகள், செயல் திட்டங்களையும் அறிந்து கொள்ள tntj.net இணையதளம் உள்ளதால் எனது இணைய தளத்தில் இயக்கம் தொடர்பான எதுவும் இடம் பெறாது.

இஸ்லாத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், சட்டதிட்டங்கள், ஆய்வுகள், கொள்கை அடிப்படையிலான விமர்சனங்கள், மின்னஞ்சல் மூலம் நீங்கள் கேட்கும் மார்க்க அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில்கள், நான் எழுதிய நூல்கள், எனது சொற்பொழிவுகள், விவாதங்கள், பேட்டிகள் போன்றவை மட்டுமே இதில் இடம்பெறும்.

குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமான கருத்துக்களை தனி நபர்களோ, இயக்கங்களோ முன் வைத்தால் அதை இந்த இணைய தளம் விமர்சனம் செய்யும். ஆனால் தனி நபர்களையோ, இயக்கங்களையோ ஒரு போதும் விமர்சனம் செய்யாது.

இந்த இணைய தளம் இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படும் பல இணையதளங்களில் இருந்து பல விதங்களில் மாறுபட்டுள்ளதை நீங்கள் காணலாம். அதில் முக்கியமான வேறுபாடு இதில் வெளியாகும் அனைத்துக்கும் நாமே பொறுப்பேற்றுக் கொள்வதாகும்.

எந்தக் கருத்து சரியானது என்று நமக்குத் தோன்றுகிறதோ அதைத் தான் மக்களிடம் நாம் வைக்க வேண்டும். தவறானது என்று நமக்குத் தோன்றுவதையும், சரியா தவறா என்று நமக்கே சந்தேகமானதையும் நாம் மக்களிடம் வைக்கக் கூடாது.

ஆனால் பெரும்பாலான இணைய தளங்கள் யாருடைய எந்தக் கருத்தையும் வெளியிடுவதுடன் 'இதில் வெளியிடப்படுவதற்கு நாம் பொறுப்பல்ல' என்று பொறுப்பற்று நடப்பதைக் காண்கிறோம்.

நாங்கள் பொறுப்பல்ல என்று மக்கள் மத்தியில் இவர்கள் அறிவித்தாலும் அல்லாஹ்விடம் இவர்கள் தான் அதற்குப் பொறுப்பாளர்கள். இவர்கள் வெளியிட்டதை நம்பி தவறானதைப் பின்பற்றியவர்களின் பாவமூட்டைகளை இவர்களும் சுமப்பார்கள்.

அது போல் தனி நபர்களைப் பற்றி எழுதப்படும் தரக் குறைவான விமர்சனங்களையும் வெளியிட்டு இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று அறிவிப்புச் செய்கின்றனர்.

அனைத்து வகையான உணவுகளையும் பரிமாறும் உணவு விடுதியில் 'இங்கே பரிமாறப்படும் பன்றி இறைச்சிக்கு நாங்கள் பொறுப்பல்ல; அதைச் சமைத்தவர் தான் பொறுப்பு' என்று அறிவிப்பு பலகை தொங்க விடுவது போல் இவர்களின் இந்தச் செயல் அமைந்துள்ளது.

பொறுப்பற்ற கேவலமான இந்த இழி செயலை இந்த இணைய தளம் செய்யாது. தனக்குச் சரி என்று பட்டதை மட்டுமே வெளியிடும். இதில் ஏற்படும் தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும்.

قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع

கேள்விப்படுவதை எல்லாம் எடுத்துச் சொல்பவன் பொய்யன் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை இவர்களுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.

நூல் : முஸ்லிம் 6

இது எனது சொந்தப் பொறுப்பில் நடத்தப்படுகிறது என்பதையும் இந்த இணைய தளத்தின் அனைத்துக்கும் நானே பொறுப்பாளி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்

ஆன்லைன் பீஜே குறித்த அறிவிப்பு

அன்புள்ள கொள்கைச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இணைய தளம் வழியாக மார்க்கத்தைச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சில சகோதரர்கள் onlinepj.com என்ற பெயரில் இணைய தளத்தை உருவாக்கி என் பொறுப்பில் தந்தார்கள்.

அன்று முதல் என் பொறுப்பில் இந்தத் தளம் இருந்து வருகிறது. தனி நபர் பொறுப்பில் இது இருக்கக் கூடாது என்பதால் இன்று முதல் அதன் எல்லா உரிமையையும், பொறுப்பையும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டேன். இனி மேல் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் ஒன்றாக இது செயல்படும். இன்ஷா அல்லாஹ்.

இதன் பெயரையும் என் பெயரைக் கொண்டதாக இல்லாமல் பொதுவானதாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்து விட்டேன். இதில் என்னுடைய தனிப்பட்ட எந்த அறிவிப்பும் இனி இடம் பெறாது.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்

20.08.2009. 5:36 AM

www.tntj.net

Visit Now!

https://onlinepj.com

Visit Now!

www.tntj.tv

Visit Now!

www.thowheedvideo.com

Visit Now!

www.jesusinvites.com

Visit Now!